Saturday, October 12, 2013

புகை பிடித்தால் ஆயுள் 10 ஆண்டுகள் குறையும்: ஆஸ்திரேலிய நிபுணர்கள் தகவல்

புகை பிடித்தால் ஆயுள் 10 ஆண்டுகள் குறையும்: ஆஸ்திரேலிய நிபுணர்கள் தகவல்
மெல்போர்ன், அக். 12–
புகை பிடிக்கும் பழக்கம் உலக நாடுகளில் ஆண்– பெண் பாகுபாடின்றி பரவியுள்ளது. மேலை நாடுகளில் விருந்துகளில் பெண்கள் புகை பிடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
புகை பிடிப்பதால் உயிருக்கு ஆபத்து, உடல் நலக்குறைவு எற்படும், ஆயுள் குறையும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் புகை பிடிப்பவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஒரு சிலர் மட்டும்தான் புகை பழக்கத்தை கைவிடுகிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சாக்ஸ் ஆய்வகத்தில் பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினார்கள். புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட 2 லட்சம் பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டனர். 4 ஆண்டுகளாக இவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சராசரியாக 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என தெரிய வந்தது. அடர்த்தியான புகையிலையை விட சக்தி குறைந்த புகையிலையால்தான் பாதிப்பு அதிகம். நுரையீரலை அதிகம் பாதிக்க செய்கிறது என்றும் தெரியவந்தது.
இதுபற்றி சாக்ஸ் ஆய்வக பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் கூறுகையில், புகை மற்றும் புகையிலை பழக்கத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு என அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என்று கண்டுபிடித்து உள்ளோம். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த ஆதாரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்த கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை 1945–ம் ஆண்டுகளில் ஆண்கள் அதிக அளவில் புகை பழக்கத்துக்கு ஆளானார்கள். 1978–ம் ஆண்டுகளில் பெண்களுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் பரவியது. ஆஸ்திரேலியாவில் இறப்பு விகிதத்தில் புகை பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம் பேர் என்றும் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் தெரிவித்தார்.

Wednesday, October 9, 2013

Two railway employees get cash award for alertness


Two railway employees were given a cash award of Rs. 5,000 each for their timely alert about a train track that was washed away for about 20 metres. Their alertness saved over 600 passengers of Yeshwantpur-Salem Fast Passenger (train No. 56242) on Tuesday night.
A release issued by Anil Kumar Agarwal, Divisional Railway Manager of South Western Railway, said that M. Velu, trolleyman, and S. Murugan, gangmate of Gang No. 5, had saved the lives of over 600 passengers.
Though their duty was over by 5 p.m. on Tuesday, they decided to inspect the condition of the bridges between Shivadi and Thoppur Ghat Section.
They found that the track to a stretch of 20 metres had been washed away in the flash floods.
Immediately, they ran for over two km to stop the train at Muthampatti at 8 p.m.
The breached track was set right around 3.30 a.m. on Wednesday morning.
Praising the exemplary act of the duo, A. K. Mittal, General Manager, South Western Railway, gave them the cash award, the release said.

'பைலின்' புயலால் கனமழை: ஆந்திரம்,ஒடிஷாவில் உஷார் நிலை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது.
அந்தமான் தீவுகளை, செவ்வாய்க்கிழமை காலை புயல் தாக்கியது. இதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சூறாவளி காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.
பைலின் என பெயரிடப்பட்டுள்ள புயல், அடுத்து ஆந்திரம், ஒடிஷாவை நோக்கிச் செல்வதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஒடிஷாவின் பாரதீப்பில் இருந்து 950 கி.மீ., தொலைவில் இப்புயல் மையம் கொண்டுள்ளது. அக்.,12ல் கலிங்கப்பட்டினம் - பாரதீப் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உஷார் நிலை:
புயல் எச்சரிக்கை காரணமாக ஆந்திரம், ஒடிஷா அரசுகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
தசரா பண்டிகையை முன்னிட்டு விடுமறைக்கு சென்றிருந்த அரசு ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு ஒடிஷா அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேரிடர் மேலாண்மை குழுவினரை முக்கிய இடங்களில் பணியமர்த்தியும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில், பாலாசூர், பத்ரக், மயூர்பஞ், கியோன்ஜர், தேன்கனால், ஜஜ்பூர், கட்டாக், கேந்திரப்பா, ஜகதீஸ்சிங்பூர், புரி, குர்தா, நயாகர், கஞ்சம், கஜபதி ஆகிய மாவட்டங்களில் உஷார் நிலை அமலில் உள்ளது.
ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

20 killed as truck falls into gorge in Punjab

Twenty pilgrims were killed while 40 others were injured when an overloaded mini-truck carrying them fell in a gorge in Manguwal village in the district early on Thursday.
“The pilgrims were returning from Chintpurni shrine in Himachal Pradesh and were headed to Begowal falling in Punjab’s Kapurthala district when the accident occurred,” Hoshiarpur SSP Sukhchain Singh Gill said over phone.
He said the truck was overloaded with pilgrims and the vehicle driver lost control resulting in the mishap along the Punjab-Himachal border.
The dead included 13 women and four children, Mr. Gill said.
The injured were rushed to nearby hospitals, he said, adding a case had been registered in connection with the incident.

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலைதூத்துக்குடி மாவட்டம் வளநாடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக சுரேஷ் என்பவர் உள்ளார். இவர் இன்று கல்லூரி வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர். 

இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

விசாரணையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலரே அவரை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதியில் கார் தீப்பிடித்து 4 பேர் சாவு

திருப்பதியில் கார் தீப்பிடித்து 4 பேர் சாவு
பெங்களூர் சம்பங்கி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா (56). இவர் மனைவி மகாலட்சுமி (44), மகன் பிரசாந்த் (26), மகள் தீபமாலா (22) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு சென்றார். தரிசனம் முடிந்து நேற்று இரவு காரில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை சத்திய நாராயணா ஓட்டி வந்தார். 

மனைவி, மகள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். சித்தூர் மாவட்டம் பலமனேடு புதலாவந்தா என்ற இடத்தில் வரும்போது காரின் பின் பகுதியில் திடீரென புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சத்திய நாராயணா நிலை தடுமாறு கார் சாலையோரம் இருந்த முள்புதரில் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கார் முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது. 

இந்த விபத்தில் சத்ய நாராயணா, அவரது மனைவி மகாலட்சுமி, மகள் தீபமாலா ஆகியோர் தீயில் சிக்கி அதே இடத்தில் கருகி பலியானார்கள். படு காயத்துடன் ரோட்டில் கிடந்த பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பலமனேடு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். 

பிரசாந்திடம் இருந்த செல்போன் மூலம் விபத்து குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து பலமனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tuesday, October 8, 2013

ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
புதுடெல்லி, அக்.9- 
மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார். 

அந்த வழக்கில் அவர், “ஒரு வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு மிகச்சரியாக பதிவு ஆகி உள்ளது என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ளும் வசதியாக வி.வி.பி.ஏ.டி. என்னும் ஒப்புகைச்சீட்டு வழங்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தார். 

இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை நாகலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அமல்படுத்தியதாகவும், அது வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. 

நிர்வாக காரணங்களையும், நிதி ஒதுக்கீடு காரணங்களையும் சுட்டிக்காட்டிய தேர்தல் கமிஷன், இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை படிப்படியாக அறிமுகம் செய்யலாம் என கூறியது. நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு 13 லட்சம் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்கு எந்திரத்துடன் வி.வி.பி.ஏ.டி. சாதனத்தை பொருத்துவதற்கு உத்தேசமாக ரூ.1,500 கோடி செலவாகும் என தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. 13 லட்சம் எந்திரங்களை தயாரித்து அளிக்கிற தகுதி பாரத மின்னணு நிறுவனம் (பிஇஎல்) மற்றும் இந்திய மின்னணு கழகத்துக்கு (இசிஐஎல்) உண்டு என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். 

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோர் தங்களது தீர்ப்பினை வழங்கினர். தீர்ப்பில், அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் பயன்படுத்துவதற்கு வசதியாக ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை (ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததும் வருவது போன்று) படிப்படியாக அறிமுகம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். 

வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் பொருத்துவதற்கு தேவையான நிதி உதவியை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்த முறையை அமல்படுத்துவதின்மூலம், சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்த முடியும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

ஒவ்வொரு வாக்காளரும் மின்னணு வாக்கு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்த சில வினாடி களில், அத்துடன் பொருத்தப்படுகிற வி.வி.பி.ஏ.டி. எந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு கிடைத்துவிடும். 

அதைப் பார்த்து அவர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு பதிவாகி உள்ளது என உறுதி செய்துகொள்ள முடியும் என்பதோடு, மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் குறை கூறுவதற்கும் வழியில்லாமல் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர் இந்த ஒப்புகைச்சீட்டை கையில் எடுத்துக்கொண்டு வர முடியாது, வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்படுகிற பெட்டியில் போட்டு விட்டு வந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.