Saturday, October 12, 2013

புகை பிடித்தால் ஆயுள் 10 ஆண்டுகள் குறையும்: ஆஸ்திரேலிய நிபுணர்கள் தகவல்

புகை பிடித்தால் ஆயுள் 10 ஆண்டுகள் குறையும்: ஆஸ்திரேலிய நிபுணர்கள் தகவல்
மெல்போர்ன், அக். 12–
புகை பிடிக்கும் பழக்கம் உலக நாடுகளில் ஆண்– பெண் பாகுபாடின்றி பரவியுள்ளது. மேலை நாடுகளில் விருந்துகளில் பெண்கள் புகை பிடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
புகை பிடிப்பதால் உயிருக்கு ஆபத்து, உடல் நலக்குறைவு எற்படும், ஆயுள் குறையும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் புகை பிடிப்பவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஒரு சிலர் மட்டும்தான் புகை பழக்கத்தை கைவிடுகிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சாக்ஸ் ஆய்வகத்தில் பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினார்கள். புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட 2 லட்சம் பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டனர். 4 ஆண்டுகளாக இவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சராசரியாக 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என தெரிய வந்தது. அடர்த்தியான புகையிலையை விட சக்தி குறைந்த புகையிலையால்தான் பாதிப்பு அதிகம். நுரையீரலை அதிகம் பாதிக்க செய்கிறது என்றும் தெரியவந்தது.
இதுபற்றி சாக்ஸ் ஆய்வக பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் கூறுகையில், புகை மற்றும் புகையிலை பழக்கத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு என அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என்று கண்டுபிடித்து உள்ளோம். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த ஆதாரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்த கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை 1945–ம் ஆண்டுகளில் ஆண்கள் அதிக அளவில் புகை பழக்கத்துக்கு ஆளானார்கள். 1978–ம் ஆண்டுகளில் பெண்களுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் பரவியது. ஆஸ்திரேலியாவில் இறப்பு விகிதத்தில் புகை பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம் பேர் என்றும் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் தெரிவித்தார்.

Wednesday, October 9, 2013

Two railway employees get cash award for alertness


Two railway employees were given a cash award of Rs. 5,000 each for their timely alert about a train track that was washed away for about 20 metres. Their alertness saved over 600 passengers of Yeshwantpur-Salem Fast Passenger (train No. 56242) on Tuesday night.
A release issued by Anil Kumar Agarwal, Divisional Railway Manager of South Western Railway, said that M. Velu, trolleyman, and S. Murugan, gangmate of Gang No. 5, had saved the lives of over 600 passengers.
Though their duty was over by 5 p.m. on Tuesday, they decided to inspect the condition of the bridges between Shivadi and Thoppur Ghat Section.
They found that the track to a stretch of 20 metres had been washed away in the flash floods.
Immediately, they ran for over two km to stop the train at Muthampatti at 8 p.m.
The breached track was set right around 3.30 a.m. on Wednesday morning.
Praising the exemplary act of the duo, A. K. Mittal, General Manager, South Western Railway, gave them the cash award, the release said.

'பைலின்' புயலால் கனமழை: ஆந்திரம்,ஒடிஷாவில் உஷார் நிலை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது.
அந்தமான் தீவுகளை, செவ்வாய்க்கிழமை காலை புயல் தாக்கியது. இதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சூறாவளி காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.
பைலின் என பெயரிடப்பட்டுள்ள புயல், அடுத்து ஆந்திரம், ஒடிஷாவை நோக்கிச் செல்வதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஒடிஷாவின் பாரதீப்பில் இருந்து 950 கி.மீ., தொலைவில் இப்புயல் மையம் கொண்டுள்ளது. அக்.,12ல் கலிங்கப்பட்டினம் - பாரதீப் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உஷார் நிலை:
புயல் எச்சரிக்கை காரணமாக ஆந்திரம், ஒடிஷா அரசுகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
தசரா பண்டிகையை முன்னிட்டு விடுமறைக்கு சென்றிருந்த அரசு ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு ஒடிஷா அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேரிடர் மேலாண்மை குழுவினரை முக்கிய இடங்களில் பணியமர்த்தியும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில், பாலாசூர், பத்ரக், மயூர்பஞ், கியோன்ஜர், தேன்கனால், ஜஜ்பூர், கட்டாக், கேந்திரப்பா, ஜகதீஸ்சிங்பூர், புரி, குர்தா, நயாகர், கஞ்சம், கஜபதி ஆகிய மாவட்டங்களில் உஷார் நிலை அமலில் உள்ளது.
ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

20 killed as truck falls into gorge in Punjab

Twenty pilgrims were killed while 40 others were injured when an overloaded mini-truck carrying them fell in a gorge in Manguwal village in the district early on Thursday.
“The pilgrims were returning from Chintpurni shrine in Himachal Pradesh and were headed to Begowal falling in Punjab’s Kapurthala district when the accident occurred,” Hoshiarpur SSP Sukhchain Singh Gill said over phone.
He said the truck was overloaded with pilgrims and the vehicle driver lost control resulting in the mishap along the Punjab-Himachal border.
The dead included 13 women and four children, Mr. Gill said.
The injured were rushed to nearby hospitals, he said, adding a case had been registered in connection with the incident.

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலைதூத்துக்குடி மாவட்டம் வளநாடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக சுரேஷ் என்பவர் உள்ளார். இவர் இன்று கல்லூரி வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர். 

இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

விசாரணையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலரே அவரை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதியில் கார் தீப்பிடித்து 4 பேர் சாவு

திருப்பதியில் கார் தீப்பிடித்து 4 பேர் சாவு
பெங்களூர் சம்பங்கி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா (56). இவர் மனைவி மகாலட்சுமி (44), மகன் பிரசாந்த் (26), மகள் தீபமாலா (22) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு சென்றார். தரிசனம் முடிந்து நேற்று இரவு காரில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை சத்திய நாராயணா ஓட்டி வந்தார். 

மனைவி, மகள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். சித்தூர் மாவட்டம் பலமனேடு புதலாவந்தா என்ற இடத்தில் வரும்போது காரின் பின் பகுதியில் திடீரென புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சத்திய நாராயணா நிலை தடுமாறு கார் சாலையோரம் இருந்த முள்புதரில் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கார் முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது. 

இந்த விபத்தில் சத்ய நாராயணா, அவரது மனைவி மகாலட்சுமி, மகள் தீபமாலா ஆகியோர் தீயில் சிக்கி அதே இடத்தில் கருகி பலியானார்கள். படு காயத்துடன் ரோட்டில் கிடந்த பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பலமனேடு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். 

பிரசாந்திடம் இருந்த செல்போன் மூலம் விபத்து குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து பலமனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tuesday, October 8, 2013

ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
புதுடெல்லி, அக்.9- 
மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார். 

அந்த வழக்கில் அவர், “ஒரு வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு மிகச்சரியாக பதிவு ஆகி உள்ளது என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ளும் வசதியாக வி.வி.பி.ஏ.டி. என்னும் ஒப்புகைச்சீட்டு வழங்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தார். 

இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை நாகலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அமல்படுத்தியதாகவும், அது வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. 

நிர்வாக காரணங்களையும், நிதி ஒதுக்கீடு காரணங்களையும் சுட்டிக்காட்டிய தேர்தல் கமிஷன், இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை படிப்படியாக அறிமுகம் செய்யலாம் என கூறியது. நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு 13 லட்சம் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்கு எந்திரத்துடன் வி.வி.பி.ஏ.டி. சாதனத்தை பொருத்துவதற்கு உத்தேசமாக ரூ.1,500 கோடி செலவாகும் என தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. 13 லட்சம் எந்திரங்களை தயாரித்து அளிக்கிற தகுதி பாரத மின்னணு நிறுவனம் (பிஇஎல்) மற்றும் இந்திய மின்னணு கழகத்துக்கு (இசிஐஎல்) உண்டு என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். 

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோர் தங்களது தீர்ப்பினை வழங்கினர். தீர்ப்பில், அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் பயன்படுத்துவதற்கு வசதியாக ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை (ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததும் வருவது போன்று) படிப்படியாக அறிமுகம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். 

வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் பொருத்துவதற்கு தேவையான நிதி உதவியை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்த முறையை அமல்படுத்துவதின்மூலம், சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்த முடியும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

ஒவ்வொரு வாக்காளரும் மின்னணு வாக்கு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்த சில வினாடி களில், அத்துடன் பொருத்தப்படுகிற வி.வி.பி.ஏ.டி. எந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு கிடைத்துவிடும். 

அதைப் பார்த்து அவர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு பதிவாகி உள்ளது என உறுதி செய்துகொள்ள முடியும் என்பதோடு, மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் குறை கூறுவதற்கும் வழியில்லாமல் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர் இந்த ஒப்புகைச்சீட்டை கையில் எடுத்துக்கொண்டு வர முடியாது, வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்படுகிற பெட்டியில் போட்டு விட்டு வந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.3.50 உயருகிறது

சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.3.50 உயருகிறது

சென்னையில் தற்போது 14.2 கிலோ எடையுள்ள வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.398 ஆகும். இதன் விலை மேலும் ரூ.3.50 உயருகிறது. கியாஸ் சிலிண்டர் விற்பனையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கான கமிஷன் தொகையை 9 சதவீதம் அதாவது 3 ரூபாய் 46 காசுகள் அதிகரிக்குமாறு கோரிக்கை விடப்பட்டது. 

தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும்பொருட்டு இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வுப்பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகை 40 ரூபாய் 71 காசுகளாக உயருகிறது. இன்னும் 2 வாரங்களுக்குள் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல 5 கிலோ கியாஸ் சிலிண்டருக்கான விற்பனையாளர் கமிஷனும் ஒரு ரூபாய் 73 காசுகள் உயர்த்திக்கொள்ள பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வுப்பிரிவு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்களுக்கு ரூ.20.36 (ஒரு சிலிண்டருக்கு) கிடைக்கும். எனவே 5 கிலோ கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலையும் ரூ.1.73 உயருகிறது. 

விற்பனையாளர்களுக்கான கமிஷன் அதிகரிப்பு கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாற்றப்பட்டது. அப்போது ஒரு சிலிண்டருக்கான கமிஷன் ரூ.25.83–ல் இருந்து ரூ.37.25 ஆகவும் 5 கிலோ கியாஸ் சிலிண்டருக்கான கமிஷன் ரூ.13.30–ல் இருந்து ரூ.18.63 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும்: ரோகித் ஷர்மா நம்பிக்கை

டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும்: ரோகித் ஷர்மா நம்பிக்கை
புதுடெல்லி, அக்.8-

டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் ஷர்மா தலைமையில் கைப்பற்றிய 2-வது கோப்பை இதுவாகும். கடந்த மே 6-ந் தேதி ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது. 

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நவீன கிரிக்கெட்டில் அணியில் தொடர்ந்து இடத்தை தக்கவைப்பது முடியாத விஷயம். டெஸ்ட் போட்டியில் அறிமுகம் காண நான் காத்து இருக்கிறேன். அந்த வாய்ப்பு விரைவில் கிட்டும் என்று நம்புகிறேன். சரியான நேரம் மற்றும் வாய்ப்புக்காக நான் காத்து இருக்கிறேன்.

சாம்பியன்ஸ் லீக் வெற்றி எங்களுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. எங்கள் அணி மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட அதிகப்படியான நெருக்கடியை நாங்கள் நல்ல முறையில் கையாண்டோம் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் நிறைய சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். 

ஹர்பஜன்சிங் சிறந்த மேட்ச் வின்னர். அவரது பார்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் அருமையாக செயல்பட்டு ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக திருப்பினார். அவர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒன்று, இரண்டு ஓவர்களின் அடிப்படையில் போட்டியின் முடிவு அமைந்ததாக நான் நினைக்கவில்லை. 

கேப்டன் சிறப்பாக விளையாடினால் அணியினரை ஈர்க்க முடியும். கேப்டன் டோனியை போல் நான் பொறுப்புடன் அணியை வழிநடத்தியதாக நம்புகிறேன். அணியின் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பையும், ஆதரவையும் அளித்தனர். 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் தெண்டுல்கருக்கு இது சரியான வழியனுப்பு விழா என்று நான் நினைக்கிறேன். தெண்டுல்கருக்காக கோப்பையை வென்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே ஆண்டில் இரண்டு கோப்பையை வென்றது பூரிப்பாக இருக்கிறது. 

இவ்வாறு ரோகித்ஷர்மா கூறினார். 

26 வயதான ரோகித்ஷர்மா இதுவரை 102 ஒருநாள் போட்டி மற்றும் 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருந்தாலும் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகவில்லை.

Monday, October 7, 2013

Telangana: Centre may step in as Andhra Pradesh struggles with power crisis

A view of evening traffic in blacked-out Anantapur city on Monday. DC
A view of evening traffic in blacked-out Anantapur city on Monday. DC
HyderabadThe state had just half its daily requirement of electricity on the second day of the Seemandhra electricity employees strike on Monday. With 4,200 MW remaining off grid, emergency services and train movement were badly affected.
Most vital installations including the Vizag and Vijayawada airports are running on back-up power systems, as were major factories and most shops in the region.
While the city experienced power outages intermittently, Visakhapatnam, Krishna, Nellore, East and West Godavari, Anantapur, Kadapa and Kurnool districts experienced crippling power shortages.
APTransco officials announced that they would impose power cuts from 8 am to 12 noon and from 1 pm to 5 pm on Tuesday. The power cuts may be increased in coming days, deputy executive engineer Venkateswarlu said.
For the first time in its history, all seven generation units at the 1,760 MW Dr Narla Tata Rao Thermal Power Station were completely shut down.
With no power, drinking water supply, train services and hospitals were affected as were shops and industries. The prolonged power cuts also affected several ATMs in the Seemandhra region.
Close to 100 feeders and 166 transformers have tripped, and there is no one to fix them. Substations have tripped in Anantapur, Kurnool and Kadapa districts. Small industries in the region were completely closed on Monday, Autonagar Cluster Association member P. Raja said.
Centre may step in
Ch V.M. Krishna Rao I DC
HyderabadConfusion and speculation were rife on Monday evening regarding the first meeting of the newly constituted Group of Ministers on the bifurcation of state as well as the Union Cabinet’s unscheduled meeting on Tuesday to take stock of the situation in state. There were also reports the Congress Core Group may meet earlier in the day.
Rumours are that the Centre is seriously considering “stepping in” as the inputs reaching New Delhi from the state are quite disturbing due to the continuing agitations by the government employees from Seemandhra for the last 65 days and the power employees’ strike which is likely to affect the southern grid.
Apparently the Chief Ministers of Tamil Nadu, Kerala and Karnataka have lodged complaints with the Central Electricity Authority against possible tripping of power in their states in view of power employees striking work at all generation stations in AP.
Union home minister Sushilkumar Shinde, along with finance minister P. Chidambaram, who is also heading the 10-member GoM, met Prime Minister Manmohan Singh on Monday evening, triggering speculation that the Centre was searching for “alternatives” to control the situation in AP.
Shinde on Monday appealed to the APNGOs as well as the power staff to call off their strike immediately and restore normalcy in the state.

ராமநாதபுரம் அருகே தி.மு.க. செயலாளர் அரிவாளால் வெட்டி கொலை

ராமநாதபுரம் அருகே தி.மு.க. செயலாளர் அரிவாளால் வெட்டி கொலைராமநாதபுரம், அக். 8–
ராமநாதபுரம் அருகே உள்ள மாடகொட்டான் பகுதியை சேர்ந்தவர் சுந்தர ராஜன் (வயது58), தி.மு.க. கிளை செயலாளர். இவரது மனைவி கமலா (50). இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். சுந்தரராஜன் மாடுகள் வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வந்தார். மேலும் மைக்செட் கடையும் நடத்தி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரராஜன் வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றார். அங்கு மாடுகளில் பால் கறந்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.
அப்போது அங்கு இருட்டில் மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்தது. பின்னர் கையில் இருந்த கத்தியால் சுந்தரராஜனை குத்தினர். அரிவாளாலும் சரமாரியாக வெட்டினர். வெட்டுபட்டதும் சுந்தரராஜன் கூச்சல் போட்டு அலறினார்.
ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்ததும் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டது. சுந்தரராஜனின் அபயகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரராஜனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. முரளீதரன், கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நிலத்தகராறில் சுந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. நிலத்தகராறு காரணமாக வருகிற 12–ந் தேதி ராமநாதபுரம் வருவாய் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ‘மர்ம’ ஆசாமிகள் சுந்தர ராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர்.
தப்பி ஓடி விட்ட கொலையாளிகள் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். தி.மு.க. கிளை செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் விரைவில் புயல் தாக்கும்: வானிலை இலாகா எச்சரிக்கை


கடந்த ஆண்டு ‘நீலம்’ புயல் மகாலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆந்திராவில் விரைவில் புயல் தாக்கும்: வானிலை இலாகா எச்சரிக்கை
தற்போது அந்தமான்– நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில் கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை தாக்கலாம்.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் சின்னம் தீவிரம் அடையும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும். அதை தொடர்ந்து புயல் தாக்கலாம் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

நெல்சன் மண்டேலா நலமாக உள்ளார்: முன்னாள் மனைவி வின்னி மண்டேலா பேட்டி

நெல்சன் மண்டேலா நலமாக உள்ளார்: முன்னாள் மனைவி வின்னி மண்டேலா பேட்டி
ஜோகன்னெஸ்பர்க், அக்.8-
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (வயது 95). இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் கடந்த ஜூன் 8ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

3 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் 1-ம் தேதி வீடு திரும்பினார்.

கட்டிலில் படுத்தபடியே வீட்டில் ஓய்வெடுத்து வந்த மண்டேலா மெல்ல நடமாட தொடங்கி விட்டதாக அவரது பேரன் கடந்த மாதம் தெரிவித்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க வானொலிக்கு பேட்டியளித்த அவரது முன்னாள் மனைவி வின்னி மடிகிசேலா, 'அவர் நன்றாக இருக்கிறார். ஆப்பிரிக்க மக்கள், மண்டேலாவின் மூதாதையர்கள் ஆகியோரது ஆன்ம ஆசியின் பலத்தால் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார்' என்று கூறியுள்ளார்.

டெல்லி கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி தீக்குளித்த பெண் உயிரிழந்தார்

புதுடெல்லி, அக்.8-

டெல்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி டெல்லி அரசு தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பவித்ரா பரத்வாஜ்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2010ம் ஆண்டிலிருந்தே அந்த கல்லூரி முதல்வர் எனக்கு பாலியல் தொந்தரவு தந்து வந்தார். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும், டெல்லி போலீசாரிடமும் நான் புகார் அளித்ததால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் என்னை வேலையில் இருந்தும் நீக்கி விட்டார்.

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன் என போலீசாரிடம் பவித்ரா வாக்குமூலம் அளித்திருந்தார்.

டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா பிரதமர் அறிவிப்பு

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா பிரதமர் அறிவிப்பு
ஒட்டாவா, அக்.8-

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு அங்கு அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. இப்போது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையும், சிறையில் அடைப்பதும் நடைபெறுகிறது. சிறுபான்மையினரான தமிழர்கள் மீது வன்முறை, காணாமல் போனதாகவும், நீதிக்கு அப்பாற்பட்டு கொலை செய்வதாகவும் வரும் புகார்கள் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்' என்று அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா நகரில் சைக்கிள் ஓட்ட தடை: மம்தா அரசுக்கு எதிராக வணிகர்கள் ஆவேசம்

கொல்கத்தா நகரில் சைக்கிள் ஓட்ட தடை: மம்தா அரசுக்கு எதிராக வணிகர்கள் ஆவேசம்
கொல்கத்தா, அக்.8-

கொல்கத்தாவின் வாகன நெரிசலை குறைக்க நினைத்த மம்தா பானர்ஜி இயந்திரம் பொருத்தப்படாமல் மெதுவாக செல்லும் சைக்கிள், டிரை சைக்கிள் போன்ற வாகனங்கள் கொல்கத்தா நகரில் உள்ள சில சாலைகளில் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால் பால்காரர்கள், பேப்பர் போடுபவர்கள், கொரியர் டெலிவரி ஊழியர்கள் என சைக்கிளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 38 சாலைகளில் சைக்கிள்கள் நுழைய அனுமதி இல்லை என அறிவித்த போலீசார் தற்போது அந்த எண்ணிக்கையை 4 மடங்கு ஆக்கி விட்டனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாள்தோறும் சுமார் 2 1/2 லட்சம் லிட்டர் பால் 2 ஆயிரம் சைக்கிள் வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தடை செய்யப்பட்ட வழிகளில் பால் வியாபாரிகள் சைக்கிளில் செல்லும் போது மடக்கி பிடிக்கும் போலீசார் 110 ரூபாயை அபராதமாக விதித்து விடுவதால் மம்தா அரசின் இந்த முடிவை எதிர்த்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜொராசான்கோ பால் மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர்-இளம்பெண் தீக்குளித்து சாவு

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர்-இளம்பெண் தீக்குளித்து சாவு
சென்னை, அக். 7-

சென்னை அண்ணா நகரில் இன்று பட்டப்பகலில் ஒரு வாலிபர், நடுத்தெருவில் வாலிபர் ஒருவரும், அவருடன் வந்த இளம்பெண் ஒருவரும் தீக்குளித்து இறந்தனர்.

அமைந்தகரையைச் சேர்ந்த டால்டா குமார், இன்று சரஸ்வதி என்ற பெண்ணுடன் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அண்ணாநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் வண்டியை நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் டால்டா குமார் திடீரென அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இருவரும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

நடுத்தெருவில் தற்கொலை செய்துகொண்ட அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் சிறந்த எதிர்காலத்திற்காக அரசியல்வாதியாக மாற விரும்புகிறேன்: மலாலா

லண்டன், அக். 7-
பாகிஸ்தானின் சமூகப் போராளியான சிறுமி மலாலா யூசூப்சாய், சிறுமிகளின் உரிமை குறித்து பேசி வந்தார். இதையடுத்து தலிபான் தீவிரவாதிகள் அவரை எச்சரித்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாத மலாலா யூசூப்சாய், குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வியை ஊக்குவிக்க வேண்டுமென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 
பாகிஸ்தானின் சிறந்த எதிர்காலத்திற்காக அரசியல்வாதியாக மாற விரும்புகிறேன்: மலாலா

இதனால் கோபம் கொண்ட தலிபான்கள் இஸ்லாத்திற்கு எதிராக, மலாலா பேசிவருகிறார் என்று கூறி கடந்த ஆண்டு அவரது தலையில் சுட்டனர். உயிருக்கு போராடிய மலாலா, உயர் சிகிச்சை பெற லண்டன் கொண்டு வரப்பட்டார். குணமடைந்த அவர் பிறகு லண்டனிலேயே தங்கியுள்ளார். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானோர்களின் பட்டியலில் மலாலாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று அவர் தான் ஒரு அரசியல்வாதியாக மாற விரும்புவதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

வருங்காலத்தில் நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பேன். எனது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்க விரும்புகிறேன். நாட்டில் கல்வியை கட்டாயமாக்க விரும்புகிறேன். பாகிஸ்தானில் மக்கள் சுதந்திரமாக வாழ்வார்கள். அவர்களுக்கான உரிமையை பெறுவார்கள். அங்கே அமைதி நிலவும். ஒவ்வொரு சிறுமி-சிறுவர்களும் பள்ளிக்கு செல்வார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன்.  

இங்கு பிரிட்டனின் கலாச்சாரத்தை கண்டு அதிர்ந்து போனோம். இங்கு மக்கள் இவ்வளவு சுதந்திரமாக இருப்பார்கள் என்று நாங்கள் (குறிப்பாய் எனது அம்மா) ஒருபோதும் நினைக்கவில்லை. பெண்கள் எந்த சந்தைக்கும் சென்று வரலாம். அவர்கள் ஆண்கள், தம்பிகள், தந்தையர் துணையில்லாமல் வெளியே எங்கும் சென்று வர முடிகிறது. 

நான் மேற்கத்தியராக மாற விரும்பவில்லை. நான் எனது நாட்டின் கலாச்சாரத்தை, பஸ்தூன் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பாகிஸ்தானுக்கு திரும்பவே விரும்புகிறேன். 

பாகிஸ்தானின் அமைதியை கொண்டுவர தலிபான்களுடனான பேச்சுவார்த்தை மிக அவசியம். பிரச்சினைகள் மற்றும் சண்டைக்கு முடிவு கட்ட பேச்சுவார்த்தையே சிறந்த வழி. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அமெரிக்கா கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 

தலிபான்கள் அவர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அவர்கள் விரும்புவது என்னவோ அதை பேச்சுவார்த்தையின் மூலமே செய்யவேண்டும். மக்களை கொல்வது, துன்புறுத்துவது, அடிப்பது இஸ்லாத்திற்கு எதிரானது. அவர்கள் இஸ்லாத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். 

இவ்வாறு மலாலா கூறினார். 

MaalaiMalar