Monday, October 7, 2013

ராமநாதபுரம் அருகே தி.மு.க. செயலாளர் அரிவாளால் வெட்டி கொலை

ராமநாதபுரம் அருகே தி.மு.க. செயலாளர் அரிவாளால் வெட்டி கொலைராமநாதபுரம், அக். 8–
ராமநாதபுரம் அருகே உள்ள மாடகொட்டான் பகுதியை சேர்ந்தவர் சுந்தர ராஜன் (வயது58), தி.மு.க. கிளை செயலாளர். இவரது மனைவி கமலா (50). இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். சுந்தரராஜன் மாடுகள் வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வந்தார். மேலும் மைக்செட் கடையும் நடத்தி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரராஜன் வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றார். அங்கு மாடுகளில் பால் கறந்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.
அப்போது அங்கு இருட்டில் மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்தது. பின்னர் கையில் இருந்த கத்தியால் சுந்தரராஜனை குத்தினர். அரிவாளாலும் சரமாரியாக வெட்டினர். வெட்டுபட்டதும் சுந்தரராஜன் கூச்சல் போட்டு அலறினார்.
ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்ததும் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டது. சுந்தரராஜனின் அபயகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரராஜனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. முரளீதரன், கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நிலத்தகராறில் சுந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. நிலத்தகராறு காரணமாக வருகிற 12–ந் தேதி ராமநாதபுரம் வருவாய் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ‘மர்ம’ ஆசாமிகள் சுந்தர ராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர்.
தப்பி ஓடி விட்ட கொலையாளிகள் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். தி.மு.க. கிளை செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment