Monday, October 7, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா பிரதமர் அறிவிப்பு

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா பிரதமர் அறிவிப்பு
ஒட்டாவா, அக்.8-

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு அங்கு அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. இப்போது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையும், சிறையில் அடைப்பதும் நடைபெறுகிறது. சிறுபான்மையினரான தமிழர்கள் மீது வன்முறை, காணாமல் போனதாகவும், நீதிக்கு அப்பாற்பட்டு கொலை செய்வதாகவும் வரும் புகார்கள் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்' என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment